கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பணிகள் பாதிக்கப்பட்டன.;

Update: 2023-09-14 02:00 GMT

அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் வெறிச்சோடி காணப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 13-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டது.

திருண்ணாமலை மாவட்டத்தில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறையினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 13-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து நிலையிலான பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

வளர்ச்சி பணிகளை விரைந்து நிறைவேற்ற பெருகிவரும் மக்கள் தொகையின் அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும்.

ஊரக வேலைத் திட்ட கணினி உதவியாளா்கள் அனைவரையும் பணிவரன் முறைப்படுத்த வேண்டும். அனைத்து நிலை பதவி உயா்வுகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும். உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ஊரக வளர்ச்சி துறையை சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் அலுவலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பல்வேறு கோரிக்கைகளுக்காக வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 75 சதவீத அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளதாக சங்க நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட தலைவர் அண்ணாமலை கூறுகையில், கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இன்று (வியாழக்கிழமை) முதல் வழக்கம் போல் அலுவலர்கள் பணிக்கு திரும்ப உள்ளதாக தெரிவித்தார்.

ஆரணி மேற்கு

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார கிளை தலைவர் ஆனந்த் தலைமையில் அனைத்து அலுவலர்களும் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வட்டார தலைவர் மு.தென்னரசு தலைமையில் அனைத்து அலுவலர்களும் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அங்கு அலுவலர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். வேலை நிறுத்த போராட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் பாஸ்கரன், வட்ட செயலாளர்கள் தேவராஜ், விஜயகுமார் பொருளாளர்கள் ஜானகிராமன், கற்பகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திவாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News