ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியவர் கைது..!
ஆரணி அருகே ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார்;
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன் கைதான ராகுல் மற்றும் குற்றவாளியை கைது செய்த போலீசார்
ஆரணி அருகே ஆந்திராவிலிருந்து பேருந்தில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சாவைக பறிமுதல் செய்து கடத்தி வந்த ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவான 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே. சேவூர் ஊராட்சிக்குபட்ட ரகுநாதபுரம் கூட்ரோடில் ஆரணி தாலுக்காபோலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக ஆரணி டி.எஸ்.பி.ரவிசந்தினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டி.எஸ்.பி.ரவிசந்திரன் தலைமையில் கிராமிய காவல் ஆய்வாளர் ராஜாங்கம் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாருடன் இணைந்து அந்தவழியாக வந்த பேருந்தை சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக இருந்த வாலிபரிடம் சோதனையிட்டபோது அவரிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆரணி அருகே பையூர் கிராமத்தை சேர்ந்த ராகுல் என்பதும், ஆந்திராவிலிருந்து ஆரணியில் விற்பனை செய்வதற்கு கஞ்சா கொண்டு வரப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ராகுல் மீது வழக்கு பதிந்து, ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய மற்ற மூன்று நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
ஒரே மாதத்தில் ஒரே கோவிலில் பூட்டை உடைத்து திருட்டு
ஆரணி அருகே ஒரே மாதத்தில் . முறை மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, இரும்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.சி.எஸ் நகரில் இரும்பேடு ஏரிக்கரை ஓரம் பழமை வாய்ந்த பொன்னியம்மன் ஆலயம் மற்றும் கருப்பண்ணசாமி கோயில் இருந்து வருகிறது. இந்த கோயிலில் வெள்ளிக்கிழமை அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் அந்நாளில் மட்டும் சுவாமி தரிசனத்திற்காக அதிக அளவில் வருவது வழக்கமாகும்.
இதனை அறிந்த திருடர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் சிலையில் இருந்த தங்கத்தாலி, பீரோவில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள், 20,000 பணம் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த திருடர்கள் நேற்று இரவு மீண்டும் கோயிலுக்குள் வந்து பூட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் திருடி சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கோவிலில் இருந்த நான்கு சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளனர். காலை கோவிலின் பூசாரி பிரகாஷ் கோவில் திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்து மீண்டும் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில்போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் கோவிலின் திருடிய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததை அறிந்த திருடர்கள் இரண்டாவது முறை திருட வரும்போது சிசிடிவி கேமராவையே திருடி சென்ற சம்பவம் போலீசுக்கு சவாலாக அமைந்துள்ளது.
ஒரு மாதத்தில் ஒரே கோவிலில் இரண்டு முறை பூட்டை உடைத்து திருடிய சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.