ஏரியில் மண் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல்
ஆரணி ஏரியில் மண் அள்ளிய டிராக்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆரணி அருகே ஏரியில் மொரம்பு மண் அள்ளி ஏற்றிச்சென்ற டிராக்டர்களை கிராம நிர்வாக அலுவலர் பறிமுதல் செய்தார். மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் வாழ்வதாரம் செழிக்க ஏரியில் உள்ள மொரம்பு மண் எடுக்கதமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி மணல் மாபியாக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் செய்பவர்கள் ஏரியில் மொரம்பு மண் அளவுக்கு அதிகமாக எடுத்து வருவதாக கிராம பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆகாரம் கிராமத்தில் உள்ள ஏரியில் சேத்பட் பகுதியை சேர்ந்த முரளி என்பவர், தான் விவசாயி என கூறி ஆகாரம் கிராமத்தில் உள்ள ஏரியில் விவசாய பயன்பாட்டிற்கு 3அடி பள்ளம் எடுக்க வருவாய் துறையிடம் அனுமதி பெற்றுள்ளார்.
இதனையொடுத்து காலை முதல் ஆகாரம் ஏரியில் சுமார் ஜேசிபி இயந்திரம் மூலம் 15 டிராக்டரில் அனுமதி பெற்றதை மீறி அளவிற்கு அதிகமாக மொரம்பு மண் அள்ளி வந்துள்ளனர். இதனை கண்ட கிராம பொதுமக்கள் ஆகாரம் வி.ஏ.ஓ வெங்கடேசனிடம் புகார் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவடத்திற்கு சென்ற வி.ஏ.ஓ வெங்கடேசன் அளவிற்கு அதிகமாக மண் எடுத்து வருவதாகவும் உடனடியாக நிறுத்தமாறு அறிவுறுத்தினார்.
ஆனால் மண் அள்ளிய நபர்கள் வி.ஓ.ஏ பேச்சை அலட்சியபடுத்தி தொடர்ந்து மண் அள்ளும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இது சம்மந்மாக வி.ஏ.ஓ வெங்கடேசன் ஆரணி தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவித்தன் பேரில் உதவி காவல் ஆய்வாளர்கள் சுந்தரேசன், அருண் ஆகியோருடன் சுமார் 10க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவடத்திற்கு வந்து வரம்பு மீறி மொரம்பு மண் அள்ளிய ஜேசிபி இயந்திரம் 15டிராக்டரை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது ஓரு டிராக்டருடன் டிரைவர் தப்பியோட முயன்ற போது ஏரியில் பள்ளத்தில் சிக்கி விபத்துகுள்ளானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி டிரைவர் தப்பியோடி விட்டார். இச்சம்பவம் குறித்து வி.ஓ.ஏ வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழக முதல்வர் விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் தொழிலாளர்களின் வாழ்வதாரத்திற்கு அனுமதி வழங்கபட்ட மொரம்பு மண், மணல் மாபியாக்கள் ரியல் எஸ்டேட் அதிபர்கள் பயன்படுத்தி தங்களின் பணிக்கு பயன்படுத்துவது விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக வேதனையுடன் கூறுகின்றனர்.