கண்ணமங்கலம் அருகே 56 ஆம் ஆண்டாக நடைபெற்ற காளை விடும் திருவிழா
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே 56 ம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது.;
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே கம்மவான்பேட்டை கிராமத்தில் 56 ம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே கம்மவான்பேட்டை கிராமத்தில் இன்று 56 ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றதில் திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், தா்மபுரி, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட காளைகள் காளை விடும் திருவிழாவில் கலந்துகொண்டு வீதியில் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து ஓடின.
வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து ஓடும் காளைகளை மாடுபிடி வீரா்கள் வீதியில் காளைகளின் மீது கைகளை போட்டு தங்களுடைய வீர விளையாட்டை வெற்றி கொண்டாட்டமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினா். காளை விடும் நிகழ்ச்சியின் போது காளைகள் முட்டி காயம் ஏற்பட்ட மாடுபிடி வீரா்களுக்கு உடனடியாக சம்பவ இடத்தில் முதலுதவி சிகிச்சை சுகாதாரத் துறை சாா்பில் அளிக்கப்பட்டு அதிகம் காயமடைந்த நபா்களை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறுதியாக வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 80 ஆயிரத்து 88ம் , இரண்டாம் பரிசாக ரூபாய் 60ஆயிரத்து66 என மொத்தம் 51 பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் வெளியூா்களிலிருந்து ஏராளமானோா் பாா்வையாளா்களாக கலந்துகொண்டனா்.
25 ஆம் ஆண்டு எருது விடும் விழா
திருவண்ணாமலை அடுத்த துர்க்கை நம்மி ஏந்தல் கிராமத்தில் ஆண்டுதோறும் எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று நடைபெற்ற 25 ஆம் ஆண்டு எருது விடும் விழாவில் ஆதமங்கலம் புதூர், வேலூர், திருப்பத்தூர் ,குடியாத்தம், கிருஷ்ணகிரி, குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது.
இதில் சீறி பாய்ந்துவரும் காளைகளை நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று அடக்கம் முயன்றனர். இறுதியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் இளைஞர்களுக்கு பரிசு பொருட்கள், ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு எருது விடும் விழாவை பார்வையிட்டனர்