ஆரணியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆரணியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.;
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கம் சார்பில் கோட்டை மைதானம் அருகே உள்ள கருவூலம் எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆரணி வட்ட கிளை தலைவர் ரா.அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆர்.லோகநாதன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் எல்.சுகுமார், இணை செயலாளர்கள் வரத.பழனி, சி.ஆறுமுகம் ஆகியோர் வரவேற்றனர். கிளை செயலாளர் ஏ.விருஷபதாஸ் விளக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத்தலைவர் முத்துவேலன் கலந்துகொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அரசு பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் வட்ட கிளை தலைவர் இல.பாஸ்கரன், செயலாளர்கள் பரசுராமன், விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட கிளை பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.