ஆரணி அருகே பள்ளி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
ஆரணி அருகே காலை உணவு திட்ட உணவில் பல்லி விழுந்ததால் 13 குழந்தைகள் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆரணி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்து கிடந்ததால் மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கங்காபுரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்து கிடந்ததால் 13 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கங்காபுரம் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் வழக்கம் போல இன்று பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதில் பல்லி விழுந்து இறந்து கிடந்ததை சமையலர் கவனிக்காமல் சமைத்து மாணவர்களுக்கு பரிமாறியுள்ளார்.
இந்த உணவை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் உண்ட நிலையில் ஒரு மாணவர் மயக்கம் அடைந்து விழுந்துள்ளார்.
இதனால் பதறிப் போன ஆசிரியர்கள் பெற்றோர்களும் பெரிய கொழும்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக 13 குழந்தைகளையும் அனுமதித்தனர்.
உடனடியாக பெற்றோர்களுக்கும் இந்த விஷயம் தெரிய வந்ததால் அவர்களும் மருத்துவமனைக்கு வர தொடங்கினர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த குழந்தைகளை திருவண்ணாமலை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் நேரில் சென்று ரொட்டி மற்றும் பழங்கள் வழங்கி நலம் விசாரித்தார்.
பல்லி விழுந்த உணவு உண்ட ஒரு குழந்தைக்கு மட்டுமே வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் மற்ற 12 குழந்தைகள் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.