ஆரணியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நிறைவு விழா
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நிறைவு விழா இன்று நடைபெற்றது.;
சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நேற்று தொடங்கியது. சிலம்பம் போட்டிகளை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சர்வதேச சிலம்பம் போட்டியின் பொது செயலாளர் தியாகு நாகராஜன், மாவட்ட ஆவின் தலைவர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் சிலம்பம் போட்டியில் 28 மாவட்டங்களில் இருந்து 550 பேர் பங்கேற்றனர் 5 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு போட்டி நடைபெற்றது. போட்டிகளின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு, சிறுவர் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.