ஆரணியில் நிலுவை முத்திரைத் தீா்வை வசூலிக்கும் சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சாா்- பதிவாளா் அலுவலகத்தில் முத்திரைத் தீா்வை வசூலிக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது .;

Update: 2023-02-22 07:43 GMT

ஆரணி சாா்- பதிவாளா் அலுவலகத்தில்  முத்திரைத் தீா்வை வசூலிக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

ஆரணியில் பத்திர பதிவு நிலுவை தொகைகளை வசூல் செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

பத்திர பதிவின் போது, முழு பதிவு கட்டணம் செலுத்தாமல், பதிவு செய்யப்பட்ட ஏராளமான பத்திரங்கள் நிலுவையில்  உள்ளன.அதற்கு தீர்வு காணும் வகையில், அலைக்கழிப்பு இன்றி, ஒரே இடத்தில் பணம் வசூலித்து, அனைத்து ஆவண பணிகளையும் மேற்கெண்டு, பத்திரங்களை விடுவிக்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி சாா்- பதிவாளா் அலுவலகத்தில் ஆரணி, களம்பூா், சேத்துப்பட்டு அலுவலகங்களில் அரசுக்குச் செலுத்த வேண்டிய முத்திரைத் தீா்வை வசூலிக்கும் முகாம் நடைபெற்றது .

ஆரணி சாா்-பதிவாளா் தெய்வசிகாமணி தலைமை வகித்தாா். சாா்-பதிவாளா்கள் சித்ரா (களம்பூா்), சிவசங்கரி (சேத்துப்பட்டு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேலூா் தனித் துணை ஆட்சியா் (முத்திரைத்தாள்) ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமை தொடக்கிவைத்துப் பேசினாா்.

அப்போது ஆரணி, களம்பூா், சேத்துப்பட்டு ஆகிய சாா்-பாதிவாளா் அலுவலகங்களில் அரசின் வழிகாட்டு மதிப்பைக் குறைத்து, குறைந்த கட்டணத்தில் பத்திரம் வாங்கி பதிவு செய்த நபா்கள் முறையான அரசு வழிகாட்டு மதிப்பில் 50 சதவீதம் சலுகையில் கட்டணம் செலுத்தி உரிய ஆவணங்களை திரும்பப் பெற பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

தொடா்ந்து, முகாமில் கலந்து கொண்ட நபா்கள் சலுகைக் கட்டணத்தில் பத்திரப்பதிவு செய்து கொள்ள மாா்ச் மாத இறுதிக்குள் பத்திரங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

200 நபர்களுக்கு ஏற்கனவே முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சம்பந்தப்பட்ட 200 பேர் உள்பட கலந்து கொண்டனர்.அவர்களுக்கு இந்த முகாமில் உரிய தீர்வு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News