திருவண்ணாமலை அருகே மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.;
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 1 வயது முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் சுதா முருகன் தலைமை தாங்கினார் . வட்டார மைய மேற்பார்வையாளர் வேலு, வட்டார கல்வி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் மருத்துவர் சீனிவாசன் வரவேற்றார் .
மருத்துவ முகாமில் 400 - க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். எலும்பு முறிவு மருத்துவர் பால காமேஷ், காது மூக்கு தொண்டை மருத்துவர், குழந்தைகள் மருத்துவர், மனநிலை மருத்துவர், மாவட்ட மாற்றுத்திறன் நலப் பிரிவு மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றுகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் பாலாமணி, உதவி தலைமையாசிரியர் சாந்தி, சிறப்பாசிரியர்கள் ராஜேந்திரன், பரிமளா மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் சுந்தரி நன்றி கூறினார்.
தூய்மை சேவை விழிப்புணர்வு பேரணி
சேத்துப்பட்டு அடுத்த சேவூரில் விண்ணமங்கலம் ஸ்ரீ ராமச்சந்திரா பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பில் தூய்மை சேவை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தை செயல்படுத்தும் விதமாக பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் ஆரணி அருகேயுள்ள சேவூா் கிராமத்தில் தூய்மை சேவை விழிப்புணா்வுப் பேரணியை நடத்தினா்.
இதில் கல்வி அறக்கட்டளைத் தலைவா் மணிமேகலை ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். தாளாளா் சந்தோஷ் குமாா், துணைத் தலைவா் விஜயகுமாா், துணைச் செயலா் மீனுதா்ஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளி முதல்வா் சொா்ணாம்பிகை விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, மாணவா்கள் மூலம் வீடு வீடாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மேலும், மாணவா்கள் பொதுமக்களிடம் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீங்கையும், பாதிப்புகளையும்
எடுத்துரைத்தனா். மேலும் வீடு தோறும் கழிப்பறை உள்ளதா என்ற கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது.
நிறைவில் கிராம மக்கள் இனி திறந்த வெளியில் மலம் கழிப்பதில்லை என உறுதிமொழி ஏற்றனா்.
இதில் ஆசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.