பொதுமக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம்
உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட புகார்கள் 34 மற்றும் சி.எஸ்.ஆர். 74 புகார்கள் உள்பட 117 புகார்களுக்கு தீர்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பாஞ்சாலியம்மன் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் காவல்துறை சார்பில் சிறப்பு முகாம் ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில் நடந்தது.
முகாமில் ஏற்கெனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நிலுவையில் உள்ள (சி.எஸ்.ஆர்.) 74 வழக்குகளும், முதல்வர் தனிப்பிரிவுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டர் உள்பட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட 34 புகார்களும், மேலும் நேரில் 28 புகார்களும் அளிக்கப்பட்டது, இவற்றில் நேரில் வழங்கிய 9 புகார்களுக்கு உடனே தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 19 புகார்களுக்கு ஒரு வார காலத்தில் தீர்வு காணப்படும் என அந்தந்தக் காவல் நிலையத்திற்கு தகவல்கள் அனுப்பப்பட்டது. உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட புகார்கள் (கரண்ட் பேப்பர்) என்று சொல்லக்கூடிய புகார்கள் 34-ம் தீர்வு காணப்பட்டது. சி.எஸ்.ஆர். 74 புகார்கள் என மொத்தம் 117 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாவும் டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தெரிவித்தார்.
முகாமில் வருவாய்த்துறையில் மண்டல துணைத் தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோகுல்ராஜன், பி. புகழ், அல்லிராணி, சாலமோன் ராஜா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.