ஆரணி அருகே பள்ளியில் புகுந்த பாம்புகள்: தீயணைப்புத்துறையினர் மீட்பு
ஆரணி அருகே பள்ளியில் புகுந்த பாம்புகளால் மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.;
பள்ளி அருகாமையில் முட்புதரில் இருந்த 2 பாம்புகளை தீயணைப்பு துறையினர் காட்டில் சென்று விட்டனர்.
ஆரணி அருகே பழங்காமூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் சுமார் 158 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.
பள்ளியின் அருகில் முட்புதர் மற்றும் காடு நிறைந்த பகுதிகளாக காணப்படுகின்றன. இதனால் பாம்பு போன்ற விஷ பூச்சிகள் அதிகளவில் நடமாடுகின்றன. இன்று பள்ளி விளையாட்டு பிரியடில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது முட்புதரில் 2 நல்ல பாம்புகள் ஒன்றுயொடு ஒன்று பின்னி பிணைந்து இருந்தன.
இதனை கண்டு குழந்தைகள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் தகவலறிந்த வந்த ஆரணி தீயைணப்பு துறையினர் பள்ளி அருகாமையில் முட்புதரில் இருந்த நல்ல பாம்புகளை பிடித்து ஆரணி அருகே வெட்டியாந்தொழுவம் காப்பு காட்டில் சென்று விட்டனர். பள்ளியில் பாம்பு புகுந்ததால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் இருக்கின்றனர். பள்ளியை சுற்றியுள்ள காடுகள் போன்ற செடி கொடிகளை அகற்றி மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்த மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.