ஆரணி ஜெயின் கோவிலில் ஷேத்திர பாலகர் ஸ்தாபன விழா

ஆரணி சமணர் கோயிலில் ஷேத்திர பாலகர் ஸ்தாபன விழா நடைபெற்றது.;

Update: 2022-06-11 07:06 GMT

ஷேத்திர பாலகர்  ஸ்தாபன விழா நடைபெற்றது.

ஆரணி பாளையம் தர்மராஜா கோவில் தெருவில் சமணர்களின் கோவிலான ஸ்ரீ ரிஷப தீர்த்தங்கரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ அபராஜித ஷேத்திர பாலகர் சுவாமி ஸ்தாபன விழா நடைபெற்றது. 

நிகழ்ச்சியையொட்டி 108 கலசங்களை வைத்து நித்திய பூஜையும், பக்தாமர விதானமும்  நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் லட்சுமி சேனா பட்டாரக பட்டாச்சாரியா இளைய சுவாமிகள் பத்மராஜ் முன்னிலையில் ஸ்தாபன விழா நடைபெற்றது பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர், மகளிர் மன்றம், இளைஞர்கள், ஜெயின் சமூக மக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News