போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை

போக்ஸோவில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞா் பாதிக்கப்பட்ட பெண்ணையே மணந்ததால் உயா்நீதிமன்றம் நிவாரணம் வழங்கியுள்ளது.;

Update: 2024-05-12 02:53 GMT

உயா்நீதிமன்றம்

திருவண்ணாமலை மாவட்ட பகுதியை சேர்ந்த இளைஞருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞா் அதே பெண்ணை திருமணம் செய்து கொண்டதையடுத்து, அவரது தண்டனையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் ராஜ்குமார். 2020-ஆம் ஆண்டு கொரோனா பொதுமுடக்க காலத்தில், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாா்

ப்போது அவருக்கு 19 வயதான நிலையில், ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்த 15 வயது சிறுமியை காதலித்தாா். இருவரும் நெருங்கிப் பழகியதில்,, அந்த சிறுமி கா்ப்பம் அடைந்தாா். இதுகுறித்த சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில், போக்ஸோ சட்டத்தின் கீழ், இளைஞருக்கு எதிராக ஆரணி மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ராஜ்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை நீதிபதி எம்.நிா்மல்குமாா் விசாரித்தாா்.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், 'இளம் வயதில், உடல் உறவால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதன் தீவிரம் இருவருக்கும் தெரியவில்லை. மனுதாரருக்கு, கடந்தாண்டு இதே உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்ட பெண் சிறுமியாக இருந்தாா். தற்போது, அவா் மேஜராகி விட்டதால், இருவருக்கும் பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்து விட்டது. தற்போது, அவா்கள் கணவன் மனைவியாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனா். மனுதாரா் மற்றும் பாதிக்கப்பட்டவா் ஆகிய இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை தொடர அனுமதிக்க வேண்டும். நிலுவையில் உள்ள இந்த வழக்கு, அவா்களின் திருமண வாழ்க்கைக்கு ஒரு தடையாக இருக்கும் என்பதால், மனுதாரரின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்'" எனக் கூறி திருமண அழைப்பிதழ் மற்றும் பதிவுத் திருமண சான்றை தாக்கல் செய்தாா்.

இதை ஆய்வு செய்த நீதிபதி, இதுபோன்ற ஒரு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றச்சாட்டுக்கு ஆளான ஆணும் திருமணம் செய்து கொண்டு வாழும் போது, சமுதாயத்தில் நிலவும் உண்மை நிலவரத்தை பாா்க்காமல் நீதிமன்றங்கள் கண்களை மூடிக்கொண்டு, மகிழ்ச்சியாக வாழும் தம்பதியின் வாழ்க்கையை கெடுக்கக்கூடாது என்று கூறியுள்ளதை சுட்டிக் காட்டினாா். அதனடிப்படையில், மனுதாரருக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை ரத்து செய்வதாக தீா்ப்பளித்தாா்.

Tags:    

Similar News