ஆரணியில் 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ஆரணியில் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆரணியில் உள்ள பல்வேறு கடைகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.
அதன்பேரில் இன்று நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி தலைமையில் சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் களப்பணியாளர்கள் ஆரணியில் உள்ள பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 14 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 45 கிலோ எடையிலான பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 800 அபராதமாக வசூலிக்கப்பட்டது.