களம்பூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.2 லட்சம் பறிமுதல்

களம்பூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் மோட்டார்சைக்கிளில் எடுத்து வந்த ரூ.2 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-08 01:10 GMT

பைல் படம்.

களம்பூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் மோட்டார்சைக்கிளில் எடுத்து வந்த ரூ.2 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

போளூர் துணை தாசில்தார் சிவலிங்கம் தலைமையில் ஏட்டு நிர்மல்குமார், பெண் போலீஸ் சங்கீதா உள்ளிட்ட பறக்கும் படையினர் நேற்று இரவு 11 மணியளவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இலுப்பகுணம் கூட்ரோட்டில் அதிவேகமாக சென்ற ஒரு மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த படவேடு மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்தை வைத்திருந்தார்.

குடும்ப தேவைக்காக பிறரிடம் கடன் வாங்கி பணத்தை எடுத்துச் செல்வதாக அவர் கூறினார். ஆனால், அவரின் கருத்தை பறக்கும்படையினர் ஏற்கவில்லை. இதையடுத்து ரூ.2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து களம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரி லோகநாதனிடம் ஒப்படைத்தனர். 

Tags:    

Similar News