ஆரணியில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
ஆரணியில் வருவாய்த்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது மணல் கடத்திய டிராக்டரைபறிமுதல் செய்தனர்;
ஆரணி தாசில்தார் க.பெருமாள், வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் கூட்டாக இன்று காலை ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
ஆரணி வி.ஏ.கே. நகர் பகுதியில் செல்லும்போது அந்த வழியாக எதிரே ஒருவர் டிராக்டரில் மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. டிரைவர் அதிகாரிகளை கண்டதும் டிராக்டரை நடு வழியிலேயே நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார்.
மணலுடன் டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆரணி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதற்கு பதிவெண் இல்லாததால் யாருடைய டிராக்டர் எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.