புரட்டாசி அமாவாசை: கமண்டல நாக நதிக்கரையில் திதி கொடுத்த பொதுமக்கள்

கோயில்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நதிக்கரையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்

Update: 2021-10-06 06:07 GMT

கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், தமிழகம் முழுவதும் கோவில்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, கோவில்களில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்பதால்,  கோவில்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோயில்களில் அனுமதி மறுத்துள்ள நிலையில் பொதுமக்கள் நதிக்கரைகளில் தற்போது தர்ப்பணம் செய்து வருகின்றனர். அதன்படி, மகாளய அமாவாசையையொட்டி இன்று, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கமண்டல நாக நதிக்கரையில் பொதுமக்கள் தங்களின் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். பலரும் பயபக்தியுடன் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, படையலிட்டு வழிபட்டனர்.

Tags:    

Similar News