கண்ணமங்கலம் அருகே ரயில்வே மேம்பாலம்: அதிகாரிகள் நேரில் ஆய்வு
கண்ணமங்கலம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.;
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே ரயில்வே உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் நிலையில், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, அப்பணிகளை ஆய்வு செய்தார். கீழ் பள்ளிப்பட்டு வல்லம் பஞ்சாயத்துகளில், ரயில்வே உயர் மட்ட மேம்பாலம் அமைய உள்ள பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர், நில எடுப்பு குறித்தும், இழப்பீடு வழங்குதல் குறித்தும் நில உரிமையாளர்களிடம் பேசினார்.
பின்னர், நிலஅளவு குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது, வட்டாட்சியர் செந்தில், மண்டல துணை வட்டாட்சியர் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர், வல்லம் பேரூராட்சி தலைவர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் உடனிருந்தனர்.