திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்திலும், செய்யாறு கோட்டாட்சியா் அலுவலத்திலும் குறைதீா் கூட்டங்கள் நடைபெற்றன.
திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்தில், வாரம்தோறும் திங்கட்கிழமை, கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
செய்யாறு, ஆரணி பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்களின் பயண நேரம், பயணச் செலவைக் குறைக்கும் விதமாக பொதுமக்கள், விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரின் நலன் கருதி இன்று முதல், பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையிலும், செய்யாறு மற்றும் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய சப் கலெக்டர் அல்லது வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டங்கள் நடைபெறும். என்று அறிவித்ததைத் தொடா்ந்து, குறைதீா் கூட்டங்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்றது.
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்திலும், செய்யாறு கோட்டாட்சியா் அலுவலத்திலும் குறைதீா் கூட்டங்கள் நடைபெற்றன.
இதில் பொதுமக்களிடமிருந்து இலவச மனைப் பட்டா, உதவித் தொகை, இலவச வீடு, கல்வி உதவித்தொகை, வங்கி கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, குடும்ப அட்டை, பட்டா மாறுதல், விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மை துறை சார்ந்த பயிர் கடன்கள், தாட்கோ மூலம் கடன் உதவி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக 219 மனுக்கள் வரப்பெற்றன.
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. கோட்டத்துக்கு உள்பட்ட ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா் ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கினா்.
கோட்டாட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் முதல் முறையாக நடைபெறுகிறது என்பதால் இது குறித்த விபரம் பொதுமக்களுக்கு சரிவர தெரியவில்லை. ஆகையால் 63 மனுக்கள் மட்டுமே வரப்பெற்றன. ஆரணி நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், விவசாயத்துறை, அரசுப் போக்குவரத்துக் கழகம், நெடுஞ்சாலைத் துறை, மின் துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.