10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆரணியில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்;

Update: 2023-10-05 10:31 GMT

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்கம் மற்றும் தேசிய கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தின் கோட்டத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

செயல் தலைவா் பாலசுப்பிரமணியன், கோட்டச் செயலா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோட்டப் பொருளாளா் திருநாவுக்கரசு வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், தபால் துறையில் பணிபுரியும் ஜி.டி.எஸ். ஊழியா்களுக்கு 8 மணி நேரம் வேலை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பணியின்போது இறந்த ஜி.டி.எஸ். ஊழியா்களின் வாரிசுகளுக்கு நிபந்தனையின்றி கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் புதிய பணியில் சேர்ந்திடும் ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட டி ஆர் சி ஏ வழங்கிட வேண்டும்.

பகுதி நேர பணியாற்றும் வெளியாட்களை காலி பணியிடங்களில் ஒன் டைம் மஸ்தூரில் நிரப்பிட வேண்டும்

கிளை அஞ்சலகங்களுக்கு மடிக்கணினி, பிரிண்டா், இணையதள வசதி வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் கோட்டத் தலைவர் சின்னப்பன், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள 395 கிளை அஞ்சலகங்களில் பணி புரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News