திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுடன் திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.;
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், மேற்கு ஆரணி ஒன்றியம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 1,619 மனுக்கள் அளிக்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு , மொடையூா் கிராமத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மொடையூா், அரும்பலூா், வம்பலூா், அல்லியாளமங்கலம், ஓதலவாடி, தும்பூா், ஊத்தூா், நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மககள் மனு அளிககும் வலகயில் தனியார் திருமண மணடபத்தில் மக்களுடன் முதல்வா் முகாம் நடைபெற்றது.
இம்முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து நல திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் எண்ணற்ற நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் வசிக்கும் பொது மக்களையும் நேரடியாக சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாத காரணத்தினால் முதலமைச்சர் தனது நேரடி கண்காணிப்பில் அனைத்து மாவட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளுக்கு பொதுவான ஒரு இடத்தில் ஒரு சேர மக்களுடன் முதல்வர் என்னும் சிறப்பு திட்ட முகாமினை நடத்தி இம் முகாமில் பெரும் அணுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 65 மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட்டு எம் எம் ஆர் 1986 மனுக்களும் எம் எம் சி ஆர் 382 மனுக்களும் என மொத்தம் 2368 மனுக்களும் பொதுமக்களிடம் இருந்து இம் முகாம்கள் மூலம் பெறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை மருத்துவ காப்பீட்டு கடன் உதவிகள் மின் இணைப்பு பெயர் மாற்றம் பட்டா மாற்றம் வேளாண் இடுப்பொருட்கள் வேண்டியும் மாற்றுத்திறனாளிகள் சார்ந்த நல திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை முகாமில் வழங்கியுள்ளார்கள்.
மேலும் பள்ளி மாணவர்களின் சான்றிதழ் தொடர்பான விண்ணப்பங்கள் அனைத்தும் ஒரு சேர அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் தற்போது வரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அந்த பகுதியில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் முகாமில் இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு சான்றிதழ்களை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமில் தங்கள் கோரிக்கை குறித்து மனுக்கள் அளித்து பயனடைய வேண்டும் என ஆட்சியர் பேசினார்.
விழாவில் ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், வட்டாட்சியா் சசிகலா, சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா்கள் அமுல் (போளூா்), பாலாஜி (சேத்துப்பட்டு) , வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா் தேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.