டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயராகுங்கள்: மாற்றுத்திறனாளிகளுக்கு ஆரணி ஆர்டிஓ அறிவுரை
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயார் படுத்திக் கொள்ளுங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆரணி ஆர்டிஓ அறிவுரை.;
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயார் படுத்திக் கொள்ளுங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆரணி ஆர்டிஓ அறிவுரை.
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், ஆரணி அரிமா சங்கம் இணைந்து கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன் பயிற்சி சுய தொழில் தொடங்குதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
விழாவில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா கலந்துகொண்டு அரசு நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் தொடங்கத் தேவையான வழிவகைகளை ஏற்படுத்தி கொள்ளுங்கள். பயிற்சி முகாமில் கூறும் கருத்துக்களை கவனமாக கேட்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
விழாவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மோகன்ராஜ், அரிமா சங்க தலைவர் சந்திரசேகர் பல்வேறு தொண்டு நிறுவன நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.