ஆரணியில் திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட பொதுக்குழு கூட்டம்
ஆரணியில் திருவண்ணாமலை மின்பகிர்மான வட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.;
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட பொதுக்குழு கூட்டம் ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் வட்ட தலைவர் கே.காங்கேயன் தலைமையில் நடைபெற்றது.
கோட்ட துணைத்தலைவர் ஆர்.கண்ணன், கோட்ட தலைவர்கள் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் பாலாஜி ஆண்டறிக்கை வாசித்தார். ஆரணி கோட்ட செயலாளர் ஜி.ரவிச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொது செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாநில துணைத்தலைவர் கே. அம்பிகாபதி, மாநில செயலாளர் ஆர்.சிவராஜ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆர்.பாரி உள்பட பலர் பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில் 1.12.2019 முதல் ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். காலியாக உள்ள 52 ஆயிரம் பணியிடங்களை சி.எல்.ஆர்., ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ. படித்தவர்களை கொண்டு நிரப்ப வேண்டும். மின்சார வாரியத்தை பொதுத்துறையாக பாதுகாத்திட வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கணக்கீட்டாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஆரணி கோட்ட தலைவர் பெருமாள் நன்றி கூறினார்.