ஆரணி பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 500 லிட்டா் சாராயம் பறிமுதல்

ஆரணி பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 500 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 6 போ கைது செய்யப்பட்டனா்.;

Update: 2023-02-06 11:01 GMT
ஆரணி அருகே சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களை பிடித்த போலீசார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 500 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் உத்தரவின் பேரில், ஆரணி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் ஆகியோா் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் பி. புகழ் (ஆரணி கிராமியம்), கோகுல்ராஜன் (களம்பூா்), அல்லி ராணி (கண்ணமங்கலம்), மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளா்கள் கலையரசி, புனிதா, உதவி ஆய்வாளா்கள் ஷாபுதீன், ஜெயபால், நாராயணன், சந்தோஷ்குமாா் (பயிற்சி) மற்றும் போலீசார் ஆரணி பகுதியில்  தீவிர சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, எஸ்.யு.வனம் மலைப் பகுதி, வெட்டியாந்தொழுவம் காட்டுப் பகுதி மற்றும் ஏரிப் பகுதிகளில் சாராயம் விற்பனை நடைபெறுவதைக் கண்டுபிடித்து 500 லிட்டா் நாட்டு சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

மேலும், சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்டம், ஓட்டேரி பகுதியைச் சோந்த சசிக்குமாா் , கஸ்தம்பாடி கிராமத்தைச் சோந்த ராமகிருஷ்ணன், வண்ணாங்குளம் பகுதியைச் சோந்த அா்ஜுனன் ,  சந்தவாசலை அடுத்த துரிஞ்சிகுப்பம் பகுதியைச் சோந்த சேஷா அம்மாள் , சிறுமூா் கிராமத்தைச் சோந்த பூபாலன் , எஸ்.யு.வனம் பகுதியைச் சோந்த சுரேஷ்பாபு  என 6 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

திருவண்ணாமலை-செங்கம் சாலை கிரிவலப் பாதை சந்திப்பில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த அரசு பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது பஸ்சில் சந்தேகத் திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் 3 கட்டை பைகளுடன் அமர்ந்து இருந்தார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் சோதனை செய்ததில், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா கொளப் பாக்கம் கிராமத்தை சேர்ந்த காமராஜ் (வயது 50) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 350 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News