ஆரணியில் போதை மாத்திரை விற்ற மருந்துக்கடைக்கு போலீசார் சீல் வைப்பு

ஆரணியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்ற மருந்துக்கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.

Update: 2022-03-23 09:35 GMT

ஆரணியில் போதை மாத்திரை விற்ற மருந்துக்கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் உள்ள ஒரு ஆங்கில மருந்துக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது ஆரணி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த முஸ்தபா (வயது 19) அதே பகுதியைச் அபினேஷ் (19) தினேஷ்ராஜ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேர் அந்த மருந்துக்கடையில் போதை மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டது தெரியவந்தது.

ஆரணி-பையூர் கூட்ரோடு சந்திப்பு அருகே அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர். 4 பேருமே கூலித் தொழிலாளிகளாவர்.

இவர்களை போலீசார் கைது செய்து சம்பந்தப்பட்ட மருந்துக் கடைக்காரரிடம் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குபின் மருந்துக்கடைக்கு போலீசார் சீல் வைத்தனர். 

Tags:    

Similar News