பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க கண்ணமங்கலத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கண்ணமங்கலம் பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.;

Update: 2022-02-16 05:38 GMT

கண்ணமங்கலம் பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கண்ணமங்கலம் பேரூராட்சியில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

அப்போது பேண்டு வாத்தியம் இசை முழங்க துப்பாக்கி ஏந்திய போலீசார் ஊர்வலமாக சென்றனர்.  காவல்  நிலைய வளாகத்திலிருந்து தொடங்கிய அணிவகுப்பு பேருந்து நிலையம் வழியாக வந்து தாலுகா அலுவலகம்,    பைபாஸ் ரோடு,  வழியாக மீண்டும் காவல் நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது.

Tags:    

Similar News