உள்ளாட்சித் தேர்தல்: ஆரணியில் போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம்
ஆரணியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடக்க, போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம் சென்றனர்.;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடக்க ஏதுவாக, அணிவகுப்பு ஊர்வலமாக சென்ற போலீசார்.
ஆரணியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடக்கவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏதும் நடக்காமல் இருக்கவும், மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் தலைமையில், டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்து, போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலம் கோட்டை தெரு, புதிய பஸ் நிலையம் வழியாக சென்று வடக்கு மாடவீதி, பெரியகடைவீதி, மண்டி வீதி, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, புதிய பஸ் நிலையம் வழியாக டவுன் போலீஸ் நிலையத்தை அடைந்தது. ஊர்வலத்தில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் தருமன், கிருஷ்ணமூர்த்தி, ஷாபூதீன், பழனிவேல் மற்றும் போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி சென்றனர்.