விபத்தில்லா தீபாவளி: காவல்துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீபாவளியை விபத்து இல்லாமல் கொண்டாடுவது குறித்து திருவண்ணாமலை காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்;

Update: 2022-10-23 01:35 GMT

மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிய தீயணைப்புத் துறையினர்

விபத்திலா தீபாவளியை கொண்டாடுவது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெற்றது

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் தீபாவளியை விபத்தில் இல்லாமல் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு செயல் விளக்கம். நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்வி மைய முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார் செஞ்சிடுவை சங்க உறுப்பினர் சாகுல் அமீத் முன்னிலை வகித்தார்.

வந்தவாசி தீயணைப்பு நிலை அலுவலர் குப்புராஜ் பங்கேற்று குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது. திறந்த வெளியில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.  வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கவும் மீண்டும் வெடிக்கவோ முயற்சிக்கக் கூடாது என்று கூறினார்.

பின்னர் பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிப்பது என்பது குறித்து அவர் செயல் விளக்கம் அளித்தார்.

பின்னர் விபத்தில தீபாவளியை கொண்டாடும் வழிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் மாணவர்கள் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டன. 

ஆரணி

விபத்தில்லா தீபாவளி கொண்டாட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆரணி நகரில் காந்தி ரோடு மற்றும் பழைய பேருந்து நிலையம், மணிகூண்டு அருகில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து  அதில் நின்றவாறு நகர காவல் ஆய்வாளர் கோகுல் ராஜன் தலைமையில் ஒலிபெருக்கி மூலம் குற்றச்செயல்களை தடுக்க கண்காணித்து வருகின்றனர்.

மேலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு ஒரு நிமிடம் போக்குவரத்தை நிறுத்தி ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

அப்போது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பெண்கள் அதிக நகைகளை அணிந்து வர வேண்டாம். பாதசாரிகள் சாலைகளின் இடது புறமாக நடந்து செல்ல வேண்டும், வாகன ஓட்டனர்கள் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று கூறியதோடு தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு விபத்தில்லாமல் கொண்டாடுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். அப்போது இன்ஸ்பெக்டர் கோகுலராஜன், ஆரணி நகர போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்பட கலந்து கொண்டனர்.

போளூர்

போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி போளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியை சுதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது, பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் முறை விளக்கம் அளித்தார்கள். அதைத்தொடர்ந்து மாணவிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.  பின்னர் விபத்தில தீபாவளியை கொண்டாடும் வழிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் மாணவர்கள் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டன. 

கண்ணமங்கலம்

கண்ணமங்கலமத்தை அடுத்த மேல்நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாடுவது, தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வட்டார கல்வி அலுவலர் அருணகிரி, ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா அன்பழகன், துணை தலைவர் பிச்சாண்டி, தலைமை ஆசிரியர் அருளரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஆரணி தீயணைப்பு அலுவலர் கோபால கிருஷ்ணன், சரவணன் ஆகியோர் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது, நீர் நிலைகளில் மூழ்கியவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை சமுதாய வளர்ச்சி அலுவலர் கார்த்திக்வாசகன், தன்னார்வலர் ஏழுமலை ஆகியோர் செய்திருந்தனர்.


Tags:    

Similar News