ஆரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த கூட்டம் நடைபெற்றது.;

Update: 2022-04-29 07:22 GMT

ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த கூட்டம் நகரமன்ற தலைவர் மணி தலைமையில் நடைபெற்றது. 

ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த கூட்டம் நகரமன்ற தலைவர் மணி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி பொறியாளர் விஜய காமராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி பேசுகையில், பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது, பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது, அவற்றை உண்ணும் மாடுகளும் இறந்து விடுகின்றன. 14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.  மேலும் மாற்றுப் பொருட்கள் என்னென்ன என்பது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. ஆரணி பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்று நகர்மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். கட்சியின் நகர மன்ற துணைத் தலைவர் பாரி பாபு, கோட்டாட்சியர் பெருமாள், காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ், நகரமன்ற உறுப்பினர்கள், வியாபாரிகள், சேவை சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News