ஆரணியில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

ஆரணியில் மக்கள் குறைதீர்வு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-12-13 01:08 GMT

பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டவருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி.

மக்கள் குறை தீர்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு ஆரணி வந்தவாசி செங்கம் போளூர் ஆகிய தாலுகா அலுவலகங்களில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் குறை தீர்வு கூட்டங்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார் அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.

ஆரணி கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அடையபலம் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் கொடுத்த மனுவில், எனது கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. அந்த கட்டிடத்தில் பழைய ஆவணங்கள் வைக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது, புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து இருப்பதால் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்து மக்கள் கட்சி ஆரணி நகர தலைவர் யுவராஜ் தலைமையிலான நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆரணி தாலுகா பையூர் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகர் குளக்கரை அருகில பங்க் கடையிலும், அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.

அங்கு மது வாங்க வருவோர் அங்கேயே குடித்து விட்டு தகராறு செய்வதும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாசமாக பேசுவதும், பெண்களை கேலி செய்வதும் போன்ற செயல்களை செய்து வருகின்றனர். இதனால் குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் நிம்மதியாக வசிக்க முடியவில்லை.

இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கள்ளத்தனமாக நடைபெறும் மது விற்பனையை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வருவாய்த்துறைக்கு சம்பந்தமான பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயர் நீக்குதல், முதியோர் உதவித்தொகை, ஆற்று பாசன கால்வாய் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட 45 மனுக்கள் பெறப்பட்டன.

பின்னர் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதில் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News