ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சியில் பட்டா மாறுதல் முகாம்

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சியில் பட்டா மாறுதல் முகாம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் நடைபெற்றது.;

Update: 2022-03-10 01:46 GMT

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சியில் பட்டா மாறுதல் முகாம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் நடைபெற்றது.

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சியில்தர்மராஜா கோவில் மைதானத்தில் பட்டா மாறுதல் முகாம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் நடந்தது.

இரும்பேடு ஊராட்சி மன்ற தலைவர் தரணி வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். ஆரணி தாசில்தார் க.பெருமாள் வரவேற்றார். முகாமில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, வீட்டுமனை பட்டா, நிலம் சம்பந்தமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்கள் வழங்கினர். உடனடியாக 27 பேருக்கு பட்டா மாறுதல் செய்து நகல்களை வழங்கினர். மீதமுள்ளவர்களுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கணினி மூலம் பதிவு செய்து வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் முகாமில் மண்டல துணைத் தாசில்தார் குமரேசன், வருவாய் ஆய்வாளர் விஜயா, கிராம நிர்வாக அலுவலர்கள் கோபால், சிவகுமார், சரவணன், பத்மநாபன், தமிழரசன், இளவரசன், நதியா, ரமீதா, ஜெகதீசன் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சரவணன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் லோகேஸ்வரி காளி, மேகலா மற்றும் ஊராட்சி செயலர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கங்காபுரம்:

சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள கங்காபுரம் கிராமத்தில் பட்டா மாறுதல் முகாம் நடந்தது. தாசில்தார் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு தாசில்தார் குமரவேல், மண்டல துணை தாசில்தார் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் வரவேற்றார். முகாமில் பெரணமல்லூர் ஒன்றியக்குழு தலைவர் இந்திரா இளங்கோவன் கலந்துகொண்டார். 36 பேர் மனு கொடுத்திருந்தனர். உரிய ஆவணங்களுடன் மனு வழங்கிய 7 நபர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது. இதில், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர்கள் ரகுராம், சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கல்லாயிசொரத்தூர்:

கீழ்பென்னாத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கல்லாயிசொரத்தூர் கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் சக்கரை, மண்டல துணை வட்டாட்சியர் கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் அல்லி வரவேற்றார். முகாமுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் பட்டாமாறுதல், உட்பிரிவு மாறுதல், பட்டாவில் உள்ள பிழைகள் திருத்தம் ஆகியவற்றுக்கான மொத்தம் 46 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பரிசீலனை செய்த அதிகாரிகள் 7 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இதில் குறு வட்ட அலுவலர் சென்னையன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம நிர்வாக உதவியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தென்முடியனூர்:

தண்டராம்பட்டை அடுத்த தென்முடியனூர் ஊராட்சியில் நடந்த பட்டா மாறுதல் முகாமில் தாசில்தார் பரிமளா, பொது மக்களிடம் இருந்து 32 மனுக்களை பெறப்பட்டார். இதில் 10 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. முகாமில் தேர்தல் துணை தாசில்தார் ஜான்பாஷா, ஊராட்சி மன்ற தலைவர் லோகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் முத்து, சம்பத், சாத்தனூர் அணை திட்டக்குழு தலைவர் ஜெயராமன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், துணைத்தலைவர் வள்ளிராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News