வீட்டை ஆக்கிரமித்ததால் தெருவில் வசித்த முதியவர் கோட்டாட்சியரிடம் மனு..!
ஆரணியில் வீட்டை ஆக்கிரமித்ததால் தெருவில் வசித்த முதியவர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தார்;
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் திங்கள்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
இதில் பட்டா மாற்றம், பரப்பு திருத்தம், கணினி பதிவு, வாரிசுச் சான்றிதழ், தடையின்மை சான்றிதழ் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 60 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களைப் பெற்ற கோட்ட அலுவலா் அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடந் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்
வீட்டை ஆக்கிரமித்ததால் தெருவில் வசித்த முதியவர் கோட்டாட்சியரிடம் மனு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் அப்பாசாமி தெருவை சேர்ந்த லோகநாதனின் மகன் மனோகரன். இவருக்கும் மனோகரின் சகோதரி மகன் ஜெயக்குமாருக்கும் பல ஆண்டுகளாக அப்பாசாமி தெருவில் உள்ள வீடு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளன. மேலும் சம்பவத்தன்று ஜெயக்குமார், மனோகரன் வசித்து வந்த வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி வீட்டை உள்பக்கமாக பூட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து வந்த மனோகரன் வேறுவழியின்றி தனது வீட்டின் வாசலிலேயே தார்பாய் கட்டி வசித்து வந்துள்ளார் . இது தொடர்பாக ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.
இதனையடுத்து ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்வு மனு பெறும் முகாமில் கோட்டாட்சியர் பால சுப்பிரமணியனிடம் பாதிக்கபட்ட மனோகரன் வீட்டை மீட்க கோரி புகார் மனு அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆரணி நகர பகுதியில் சொந்த வீட்டிலிருந்து முதியவரை வெளியேற்றிய சம்பவம் பெரும் பரரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்யார்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுனுக்தலின்படி செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பட்டா மாற்றம், பரப்பு திருத்தம், கணினி பதிவு, வாரிசுச் சான்றிதழ், தடையின்மை சான்றிதழ் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 92 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களைப் பெற்ற சார் ஆட்சியர் பல்லவி வர்மா அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடந் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.