ஆரணியில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

ஆரணியில் திமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்.

Update: 2024-03-29 02:52 GMT

திமுக தேர்தல் அலுவலகத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்த அமைச்சர் வேலு

திருவண்ணாமலை மாவட்டம் திமுகவின் ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றதில் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் திறந்து வைத்தாா்.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் அறிமுகக் கூட்டம் மற்றும் ஆரணி, போளூா், செய்யாறு, வந்தவாசி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோந்த திமுக செயல்வீரா்கள் கூட்டம் சேத்துப்பட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி ஆகியோா் கலந்து கொண்டு வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தனைஅறிமுகம் செய்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தனா். முன்னதாக, அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவா். மத்திய அரசு தமிழக மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை, அதிமுக, இபிஎஸ், ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா என 4 அணியாக பிரிந்து இருக்கிறது. பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டு சேர்ந்து தமிழ்நாட்டைக் கடந்த 10 ஆண்டு காலமாக வஞ்சித்துள்ளனர் என கடுமையாக குற்றம் சாட்டி பேசினார்.

தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் எல்லாம் படிக்க வேண்டும், பெண்கள் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வரவேண்டும் ,முதன் முதலில் தமிழ்நாட்டில் பெண்கள் எல்லாம் உள்ளாட்சியில் பங்கு பெற வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் ஆகும்.

கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் முதலமைச்சர் இரவு பகல் பாராமல் தூங்காமல் ஆட்சி நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் சமுகநீதி மற்றும் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. மகளிா் உரிமைத்தொகை, இலவச பேருந்து, புதுமைப் பெண் என எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. எனவே, ஆரணி வேட்பாளா் தரணிவேந்தனை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அம்பேத்குமாா் (வந்தவாசி), ஜோதி (செய்யாறு), ஒன்றியச் செயலா்கள் எழில்மாறன், மனோகரன், விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் மணிகண்டன், நகரச் செயலா் முருகன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பொதுக்குழு உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Similar News