போளூர் அரசு பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு

போளூர் அரசு போக்குவரத்து பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை எம்பி திறந்து வைத்தார்.;

Update: 2024-07-14 02:13 GMT

குளிரூட்டப்பட்ட ஓய்வரையை திறந்து வைத்த ஆரணி எம்பி தரணி வேந்தன்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தமிழ் நாடு அரசு போக்குவரத்து பணிமனை சார்பில் குளிரூட்டப்பட்ட தொழிலாளர் ஓய்வு அறையை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் திறந்து வைத்தார்.

போளூர் அரசு பணிமனை சார்பில் குளிரூட்டப்பட்ட தொழிலாளர் ஓய்வறையை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் ஓய்வரையில் அமைக்கப்பட்டிருந்த குளிர்ரூட்டியை (ஏசி) இயக்கி வைத்தது நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் திமுக மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே கம்பன், மாநில தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை செயலாளர் சௌந்தர்ராஜன், பொது மேலாளர் செந்தில், துணைமேலாளர் துரைராஜ், போளூர் பணிமனை மேலாளர் சீனிவாசன்,தொ. மு.ச பேரவை பொதுச் செயலாளர் சௌந்தரராஜன், அமைப்பு செயலாளர் ராஜரத்தினம், பணிமனை நிர்வாகிகள் அண்ணாமலை, சுதாகர், முரளிதரன், சூரியகுமார், தரணிநாதன், குணசீ லன் ம ற் று ம் தொழிற்சங்க நிர்வாகிகள், போளூர் பணிமனை அனைத்து தொழிலாளர்கள், திமுகவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் பூப்பந்து போட்டி, ஆரணி அரசு பணிமனையில் குளிருட்டு ம் ஒய்வு அறை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு நகர மன்ற தலைவர் மணி தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக ஆரணி தொகுதி எம். பி.தரணிவேந்தன் மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் கோட்டை மைதானத்தில் ஆரணி கிளப் சார்பில் நடைபெற்ற பூப்பந்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து ஆரணி அரசு போக்குவரத்து பணிமனையில் குளிரூட்டப்பட்ட தொழிலாளர் ஒய்வு அறையை எம்.பி. தரணிவேந்தன் மற்றும் மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.

இதில் மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, ஒன்றிய செயலாளர்கள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்தி, திமுக நிர்வாகிகள் மண்டல , பணிமனை நிர்வாகிகள், தொழில்நுட்ப மேலாளர் துரைராஜ், கிளை மேலாளர் ராமு காசிலிங்கம், ரகுபதி, மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News