ஆரணி: தனியார் செல்போன் டவர் அமைப்பதை தடுத்த பொதுமக்கள்
ஆரணியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆரணி புதுகாமூர் சாலையில் கே.கே. நகர் குடியிருப்பு பகுதியில், பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க ஒப்பந்தம் செய்து, அதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. அதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணி செய்ய விடாமல் தடுத்து ஆரணி நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொடர்பாக பொதுமக்களிடம், வருவாய் துறையினரிடம் புகார் மனு அளித்திடுங்கள்; இதுபோன்று எதிர்ப்பு தெரிவித்ததாக கோரி சாலை மறியல், கும்பல் கூடுவதை தவிர்க்க வேண்டும் என சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
நேற்று ரம்ஜான் பண்டிகை என்பதால் வருவாய் துறையினரிடம் புகார் அளிக்க முடியவில்லை. இன்று அவர்கள் ஆரணி வருவாய் கோட்டாட்சியரிடம், தாசில்தாரிடமும் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு அளிப்பதாக தெரிவித்தனர்.