ஒதுக்கிய நேரப்படி வேலையில்லை; ஊராட்சி ஒன்றியம் முன் மக்கள் தர்ணா

ஆரணியில் 100 நாள் வேலை வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-08-13 06:09 GMT

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்.

ஆரணியில் 100 நாள் வேலை வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் அரசு ஒதுக்கிய நேரப்படி வேலை வழங்கவில்லை கூறப்படுகிறது. எனவே இதனைக் கண்டித்து, ஆரணியில் உள்ள மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சபிதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் ஆகியோர் சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர் திலகவதி மற்றும் சிலரை தனது அறைக்கு வரவழைத்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்று விவரங்களை கேட்டறிந்தார்.

Tags:    

Similar News