இரவு ஊரடங்கு: இரு சக்கர வாகன ஓட்டிகளை எச்சரித்த போலீசார்
ஆரணியில் இரவில் காரணம் இல்லாமல் வெளியே வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பிய போலீசார்
தமிழகத்தில் மீண்டும் கொரொனோ தொற்று அதிகரித்து வரும் சூழலில், தற்போது தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கினை அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அத்தியாவசியமான மருந்து கடைகள் தவிர்த்து மற்ற தொழில் நிறுவனங்கள் தமிழக அரசு அறிவித்துள்ள கொரொனோ தடுப்பு இரவு ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்ற தொடங்கினர். அதன் முதற்கட்டமாக ஆரணியில் நேற்றைய தினம் இரவு ஒன்பது மணி முதல் வியாபாரிகள் அனைத்து விதமான கடைகளையும் அடைத்தனர். இதனால் நகர்ப்புற சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் காவல்துறையினர் நகர பகுதிகளான காந்தி சாலை, பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இரவில் காரணம் இல்லாமல் வெளியே வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனோ நோய் தொற்று பற்றிய அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.