ஆரணியில் முதல் முறையாக நடந்த நீட் தேர்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நீட் தேர்வு மையம் முதல் முறையாக இந்த ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது;
தேர்வு எழுத வந்த மாணவ- மாணவிகள் அனைவரும் தீவிர சோதனை செய்யப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஆரணியில் முதல்முறையாக நடந்தது. ஆரணியில் மில்லர்ஸ் ரோட்டில் உள்ள கண்ணம்மாள் சி.பி.எஸ்.இ. இன்டர்நேஷனல் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
இங்கு 288 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசினர் கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சாந்தமூர்த்தி தலைமையில் தேர்வு மையம் கண்காணிக்கப்பட்டது. தேர்வு எழுத வந்த மாணவ- மாணவிகள் அனைவரும் தீவிர சோதனை செய்யப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர்.
மாணவ- மாணவிகள் சரியாக 11.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் அனுப்பப்பட்டனர். சரியாக 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்கப்பட்டது. தேர்வு மையத்திற்கு வெளியே மாணவர்களின் பெற்றோர்கள் காத்திருந்தனர்.