ஆரணியில் தேசிய அஞ்சல் வார விழா
ஆரணி தலைமை அஞ்சலகத்தில் தேசிய அஞ்சல் வாரவிழா நடைபெற்றது;
ஆரணி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் வாரவிழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தலைமை அஞ்சலகத்தில் தேசிய அஞ்சல் வாரவிழா நடைபெற்றது. உதவிக் கோட்ட கண்காணிப்பாளா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் தாமரைச்செல்வி சிறப்பு விருந்தினராக பங்கேற்று அஞ்சலகத்தில் சேமிப்பது குறித்துப் பேசினாா்.
மேலும், அஞ்சலகத்தால் உள்ள நன்மைகள் குறித்தும், அஞ்சலகத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் பேசினாா். மூத்த அஞ்சலக வாடிக்கையாளா்கள், சிறுசேமிப்பு முகவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புதிதாக கணக்கு தொடங்கிய பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் அஞ்சலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
ஆரணியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் மதுக் கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம் நடந்தது.
ஆரணி காந்தி ரோட்டில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நீண்ட காலமாக பிரச்சினையாக இருந்து வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் சாா்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரணி பழைய பஸ் நிலையம் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது. தமிழ்நாடு மக்கள் சமூக பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார்.
டாஸ்மாக் கடையினால் போக்குவரத்து நெரிசலும் மற்றும் வழிப்பறி சம்பவங்கள், மதுபிரியர்கள் குடித்துவிட்டு அருகில் உள்ள கடையின் முன்பாகவே படுத்துக்கொண்டு வாந்தி எடுத்து பல்வேறு இன்னல்களையும், வியாபாரிகளுக்கு தொந்தரவு செய்து வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர், உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக ஆரணி வருவாய் கோட்டாட்சியர், தாசில்தாரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், அப்பகுதியில் உள்ள வியாபார சங்க பொறுப்பாளர்கள், வியாபாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.