கண்ணமங்கலம் தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி விற்பனை தொடக்கம்

கண்ணமங்கலம் தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி விற்பனை தொடங்கப்பட்டது.;

Update: 2022-08-08 13:22 GMT

 தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி விற்பனை தொடங்கப்பட்டது.

கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தபால் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி விற்பனை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஓய்வு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு, தபால் அலுவலா் பத்மநாபனிடம் ரூ.25 செலுத்தி தேசிய கொடி பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கண்ணமங்கலம் கிளை நூலகர் சிவசங்கரன், ஆடிட்டர் ஜெயலட்சுமி, தபால் பணியாளர்கள் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் காட்டுக்காநல்லூர் தபால் அலுவலகத்தில் தபால் அலுவலர் துரையிடம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கணேசன் தேசியக்கொடியை பெற்றுக்கொண்டு விற்பனையை தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News