குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்ற நகராட்சி ஆணையாளர் உத்தரவு
ஆரணியில் முறையான கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படாததால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்ற நகராட்சி ஆணையாளர் உத்தரவு.
ஆரணி ஆரணிப்பாளையம் கே.சி.கே. நகர் விரிவாக்கப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சமீபத்தில் பெய்த கனமழையால் கழிவு நீரும், மழை நீரும், கால்வாய் நீரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்துள்ளது.
அங்கு முறையான கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படாததால், அந்த நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், புதிய நகராட்சி ஆணையாளரை இன்று சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
கோரிக்கை மனுவை பரிசீலனை செய்த புதிய நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி, உடனடியாக நகராட்சி ஊழியர்களை அனுப்பி, அந்தப் பகுதியில் சூழ்ந்துள்ள நீரை மோட்டார் வைத்து அகற்ற உத்தரவிட்டார்.