திருவண்ணாமலையில் நடமாடும் தடுப்பூசி முகாம்
கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடமாடும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.;
கண்ணமங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த நடமாடும் தடுப்பூசி முகாம்.
கண்ணமங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடமாடும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவர் அனிலா, தடுப்பூசி குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். கோடிக்கணக்கான மக்களுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே இந்த ஊசியைப் போட யாரும் பயப்பட வேண்டாம். என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முகாமில் நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் மோனிகா, சுகாதார ஆய்வாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.