ஆரணி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு
ஆரணி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒன்றியத்தில் ரூபாய் 1.42 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
ஆரணி ஊராட்சி ஒன்றியம் சங்கீதவாடி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 36.46 லட்சத்தில் நூலகம், ஆய்வுக்கூடம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ரூபாய் 58 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சுகாதார நிலையத்திற்கு 25 லட்ச ரூபாய்க்கு மருத்துவ உபகரணங்கள் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிகளை ஆரணி எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.
பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் கூறினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள், மருத்துவத் துறை பொறியாளர்கள், ஊராட்சி பொறியாளர்கள், ஊராட்சி மன்றத்தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.