தங்கப் பதக்கம் வென்ற மாணவனுக்கு அமைச்சர் பாராட்டு!

ஆரணியில் இறகு பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவனை அமைச்சர் வேலு பாராட்டினார்

Update: 2023-11-15 13:45 GMT

தங்கப்பதக்கம் வென்ற மாணவனை பாராட்டிய அமைச்சர் வேலு

ஆரணியில் இறகு பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவனை அமைச்சர் வேலு பாராட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சேவூர் ஊராட்சியில் இபி நகர் பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து ஊழியர் உதயசங்கர் தமிழரசி தம்பதியினருக்கு பிரபு என்ற மகனும் ரேஷ்மா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரபு பள்ளிகொண்டா பகுதியில் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

மேலும் பிரபுவிற்கு சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் அதிகம். இதனால் இறகு பந்து போன்ற விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர் இதற்காக தனியாக கவனம் செலுத்தி பயிற்சி மேற்கொண்டு தனியார் பள்ளி சார்பில் மாவட்ட மாநில அளவில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில் பங்கேற்று சுமார் 40-க்கும் மேற்பட்ட சான்றுகள் மற்றும் பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஹைதராபாத்தில் தேசிய அளவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இறகு பங்கு போட்டியில் தங்கம் என்று சாதனை படைத்துள்ளார்.

தேசிய அளவில் தங்கம் என்று சாதனை படைத்த நிலையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மேலும் இது குறித்து பிரபு கூறுவையில்,

கடந்த ஏழு ஆண்டாக கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு இறகு பந்து போட்டியில் விளையாடி பல சான்றுகள் மற்றும் பதக்கங்களை பெற்றுள்ளேன். தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளேன் .

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடுவதே எனது லட்சியம் என கூறினார். மேலும் அமைச்சர் தன்னை வாழ்த்தி பாராட்டியது தனக்கு உத்வேகத்தை அளிப்பதாகவும் மாணவர் பிரபு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் போது மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி மணியன், மற்றும் மாணவனின் பெற்றோர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News