ஆரணி தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்
ஆரணி தொகுதியில் நடைபெற்று வரும் பணிகளை சேவூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் பள்ளிக் கட்டடங்கள், கூட்டுரவு கடை ,சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகளை முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் மேற்கு ஆரணி ஒன்றியம் சம்புவராய நல்லூர் கிராமத்தில் ரூபாய் 13 லட்சத்தில் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டவும், தச்சூர் கிராமத்தில் 5 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கவும், முருகமங்கலம் கிராமத்தில் 14.5 லட்சத்தில் கூட்டுறவு நியாயவிலைக் கடை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
இதில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று பணிகளை தொடங்க அடிக்கல் நாட்டினார்.
பின்னர் இரும்பேடு கிராமத்திலிருந்து ஆதனூர் செல்லும் பாதையில் தமிழ்நாடு அரசு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 55 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கும் படி கூறினார்.
இந்நிகழ்வின் போது ஆய்வாளர் ஜோதி, வழக்கறிஞர் வெங்கடேசன், ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன், மாவட்ட ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.