ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பேரவை கூட்டம்

குறைந்தபட்ச ஓய்வூதியம் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-26 11:43 GMT

 ஆரணியில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே.நகர் பகுதியில் காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொது செயலாளர் சரவணபெருமாள் முன்னிலை வகித்தார். செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கண்ணன் பங்கேற்றார்.

இதில் தி.மு.க. அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் குறைந்தபட்சம் ஓய்வூதியம் திட்டத்தை தமிழக அரசு உடனே அமுல்படுத்த வேண்டும் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தினர்.

ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி ஏற்படுத்தி தர தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்பது  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

இதில் ஆரணி, வந்தவாசி, செய்யார் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்த அங்கன்வாடி பணியாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News