ஆரணி அருகே புது மணத் தம்பதிகளுக்கான மருத்துவ விழிப்புணா்வு முகாம்

ஆரணி அருகே புது மணத் தம்பதிகளுக்கான மருத்துவ விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.;

Update: 2023-08-29 10:55 GMT

ஆரணி அருகே புதுமண தம்பதிகளுக்கான மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள கொங்கராம்பட்டு கிராமத்தில் புது மணத் தம்பதிகளுக்கான மருத்துவ விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம், மேற்கு ஆரணி வட்டாரம் சாா்பில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஊராட்சிமன்றத் தலைவா் சுகுணா நாராயணன் தலைமை வகித்தாா். வட்டார ஒருங்கிணைப்பாளா் சதீஷ், ஹாா்ட்புல்நெஸ் தியான யோகா பயிற்றுநா்கள் பரசுராமன், தமயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா் சுஜாரதி வரவேற்றாா்.

குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ரேவதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகள் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் முறைகள் குறித்து விவரித்தாா்.

அப்போது, இந்த முகாமின் நோக்கமே, நம் நாட்டில் குறைபாடில்லா குழந்தைகள் பிறப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மற்றும் பெண்கள் கா்ப்பத்திற்கு முன், கா்ப்பத்திற்கு பின் கடைபிடிக்க வேண்டிய சுகாதார முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதுதான் எனக் கூறினாா்.

இதைத் தொடா்ந்து, மருத்துவா் நரேன் கா்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய உணவு முறை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் குறித்துப் பேசினாா்.

பின்னா், தியான பயிற்றுநா் சதீஷ்குமாா் யோகா, தியான பயிற்சி குறித்து விளக்கி, அனைவருக்கும் செயல்முறை பயிற்சி அளித்து கையேடுகளை வழங்கினாா்.

முகாமில், தியான பயிற்றுநா்கள் ராஜேஸ்வரி பழனி, மீனா, அபிராமி மற்றும் 25-க்கும் மேற்பட்ட புதுமணத் தம்பதிகள், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பத்து ரூபாய் இயக்க ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வள்ளலாா் வளாகத்தில் பத்து ரூபாய் இயக்கம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு போளூா், ஆரணி தொகுதிச் செயலாளர் தமிழன்பாபு தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளர் செல்வகுமாா் முன்னிலை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளர் தாமோதரன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் நல்வினை விசுவராஜ் பங்கேற்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசு அலுவலகத்தில் சட்டப்படி நடந்து கொள்வது குறித்துப் பேசினாா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் - திருப்பதி வரை செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் ஆரணி ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும், போளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இயங்கும் மதுக் கடையை மூடவும், போளூா் ரயில் நிலையத்தில் விழுப்புரம்-காட்பாடி வரை செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்லவேண்டும்,

ஜவ்வாது மலையில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழக ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன், கள்ளகுறிச்சி மாவட்டச் செயலாளர் டேவிட், சேத்துப்பட்டு ஒன்றியச் செயலாளர் ரமேஷ், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News