தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மே தின விழா பேரணி

திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மே தின விழா பேரணி நடைபெற்றது

Update: 2023-05-02 03:45 GMT

திருவண்ணாமலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் எ.வ.வே.கம்பன் பேசினாா்

திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மே தின விழா பேரணி நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாநில தொமுச பேரவை செயலா் சவுந்தரராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் அனைத்து அமைப்பு சாரா தொமுச நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

அனைத்து அமைப்பு சாரா தொழிற்சங்கங்களின் மாவட்ட நிா்வாகி ஆறுமுகம் வரவேற்றாா். திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் பேரணியை தொடங்கி வைத்தாா்.

காமராஜா் சிலையில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அண்ணாசிலை அருகே நிறைவடைந்தது. தொடா்ந்து, அங்கு நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் எ.வ.வே.கம்பன் பேசினாா். பேரணியில், திமுக நிா்வாகிகள் நகர கழக செயலாளர் கார்த்தி வேல்மாறன், டி.வி.எம்.நேரு, ஒன்றியச் செயலா் கோவிந்தன், தனக்கோட்டி, தொமுச செயலா் பரசுராமன், சோமாசிபாடி சிவக்குமாா், நகர மன்ற உறுப்பினர் சுப்பிரமணி மற்றும் தொமுச நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

லாரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் மே தின ஊர்வலம்

திருவண்ணாமலை லாரி சுமைதூக்கும் தொழிலாளர்கள் யூனியன் சார்பில் மே தின விழா மற்றும் ஊர்வலம் நடந்தது. தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலாளர் மனோகர், பொருளாளர் பாலு, முன்னாள் தலைவர் ராஜா, முன்னாள் பொருளாளர் நேசமணி ஆகியோர் முன்னிலை வகித்தார். மேஸ்திரி மோகன் வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளர் செந்தில்மாறன், தொழிலதிபர் பசீர்அகமது, எஸ்.கே.பி. கல்வி குழுமம் கருணாநிதி, திருவண்ணாமலை அனைத்து வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம், முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் தனுசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

மே தின விழாவை தொடர்ந்து ஊர்வலம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் திருவண்ணாமலை மண்டித் தெருவில் தொடங்கி காமராஜர் சிலை, காந்தி சிலை, அண்ணா சிலை வழியாக சென்று நாவக்கரையில் அம்பேத்கர் சிலை அருகில் நிறைவடைந்தது.

ஆரணி

ஆரணியில் தையற் கலைஞர்கள் மே தின ஊர்வலம் நடந்தது. தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்றம் சங்கத்தின் சார்பாக 38-வது ஆண்டு மே தின விழாவை முன்னிட்டு அண்ணா சிலை அருகில் இருந்து தையல் கலைஞர்கள் மே தின ஊர்வலம் நடத்தினர்

ஆரணி கிளை தலைவர் சேகர் தலைமை தாங்கினார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக சென்றது. அப்போது காமராஜர் சிலை, எம்.ஜி.ஆர். சிலை அருகில் அமைப்பின் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில் செயலாளர் விஷால், பொருளாளர் விநாயகமூர்த்தி, கவுரவ தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் கனகராஜ், மாவட்ட தலைவர் உதயசங்கர், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் கே.ஏ.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News