ஸ்ரீ மாரியம்மன் பூப்பல்லாக்கு திருவிழா..!
ஆரணி அருகே ஸ்ரீ மாரியம்மன் பூப்பல்லாக்கு திருவிழா விமர்சையாக நடைபெற்றது.;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.காட்டேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி, இரவு குளிா்பானங்களால் அலங்காரம் செய்யப்பட்ட நூதன புஷ்ப பல்லக்கில் அம்மன் உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - வந்தவாசி சாலை திருமணி அருகேயுள்ள எஸ்.காட்டேரி கிராமத்தில் ஸ்ரீமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. நேற்று பகல் நடைபெற்ற கூழ் வார்க்கும் திருவிழாவில் பெண் பக்தர்கள் கொப்பரையில் கூழ் ஊற்றி வழிபாடு செய்தனர். மேலும் ஏராளமான பெண் பக்தர்கள் பொங்கல் வைக்கும் வழிபாடு நடத்தினர்.
நேற்று இரவு குளிர்பானங்கள், சாக்லேட், புஷ்பங்களால் அலங்காரம் செய்யப்பட்ட பெரிய புஷ்ப பல்லக்கில் அம்மன் திரு வீதி உலா வான வேடிக்கையுடன் , மேல தாளங்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.திருவிழாவில் ஆரணி, போளூர், வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.
கங்கையம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை கங்கையம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது.
கங்கையம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி திருவிழாவில் பெண் பக்தர்கள் கொப்பரையில் கூழ் ஊற்றி வழிபாடு செய்தனர்.பின்னா், காலை அம்மன் சிரசு ஊா்வலமாக கொண்டு சென்று கோயிலில் அம்மன் உடலில் பொருத்தி வழிபட்டனா்.
பின்னா், கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா். பின்னா், இரவு நேரத்தில் புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. இதில், ஆரணி டிஎஸ்பி வி.ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.
நகர, கிராமிய காவல் ஆய்வாளா்கள் விநாயகமூா்த்தி, ராஜாங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்பாடுகளை செங்குந்த மரபினா் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.