ஆரணியில் மக்களுடன் முதல்வா் திட்டம்..!

ஆரணியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 310 மனுக்கள் பெறப்பட்டன.;

Update: 2023-12-19 03:27 GMT

முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிய கலெக்டர் முருகேஷ்

ஆரணியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 310 மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சைதாப்பேட்டை திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சிக்கு நகரமன்ற தலைவர் மணி அனைவரையும் வரவேற்றார்.

வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக செய்யாறு சர்க்கரை ஆலை இயக்குனரும் வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் பங்கேற்று நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

மேலும் இந்த முகாமில் மின்சார துறை, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, அலுவலர்கள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலம் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, கூட்டுறவு துறை, உள்ளிட்ட துறைகள் மூலம் பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு குறிப்பிட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டன.

இதில் 15 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. இதனை அடுத்து உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பயனாளிகளிடம் வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசுகையில், மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். மேலும் இந்த திட்டத்தை நிரந்தரமாக்கி பொதுமக்களுக்கு சேவை வழங்கவே தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திட்டத்தை தொடங்கியுள்ளார். மேலும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த திட்டத்தில் பயனடைய வழி வகுக்க வேண்டும் என கூறினார்.

நிகழச்சியில் மாவட்ட செய்தி தொடா்பு அலுவலா் சரவணன், வட்டாட்சியா் மஞ்சுளா, நகராட்சி ஆணையா்.குமரன், திமுக மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் அன்பழகன், சுந்தா், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ராஜேந்திரன், நகராட்சி ஆணையாளர்கள் துறை சேர்ந்த அதிகாரிகள், ஒன்றிய செயலாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News